பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து தலையில் வாசம் செய்யும்.
இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்திலயே கண்டுபிடித்துவிட்டால், பொடுகுக்கான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.
இந்த ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும்.
நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும். நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும். ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

வாரம் ஒரு முறை மேலே கொடுத்துள்ள டிப்ஸ்களை மாற்றி மாற்றிச் செய்யும்போது, தலை சூப்பர் சுத்தமாக்கும்.
வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.
குழந்தைகளுக்குப் பேன் தொல்லை இருந்தால், வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைத் தடவிக் குளிப்பாட்டலாம்.
* துளசி மிகவும் சிறந்த மூலிகைப் பொருள். அத்தகைய கருந்துளசியை படுக்கும் தலையணையில் பரப்பி விட்டு, அதன் மேல் ஒரு வெள்ளைத் துணியை விரித்து, தூங்க வேண்டும். இதனால் தலையில் இருக்கும் பேன்கள் அதன் வாசத்திற்கு தலையில் இருந்து வெளியேறிவிடும்.
* வில்வக்காயை நன்கு காய வைத்து பொடி செய்து, அதனை சீயக்காய் பொடியுடன் சிறிது கலந்து, தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் தலையில் பொடுகும் பேனும் போவதோடு, கண்ணுக்கு மிகவும் நல்லது.
* தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து, தலையில் தேய்த்து ஊற வைத்து, குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்து விடும்.
* கூந்தலை அலசும் போது, தலைக்கு சீயக்காய் மற்றும் புளித்த தயிரை சேர்த்து, அதனை தலைக்கு தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, பின்பு கூந்தலை அலச வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, கூந்தலும் மென்மையாகும்.
* நன்கு புளித்த தயிரை தலைக்கு தடவி, அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு கூந்தலை அலசினால், தலையில் இருக்கும் பேன் மற்றும் பொடுகு போய்விடும்.
* மருதாணி விதை,சிறிது வெந்தயம் மற்றும் வசம்பு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு , காய வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், பேன் மற்றும் பொடுகுத் தொல்லை நீங்கும்.
பேன் / பொடுகைப் போக்க வழிகள், ஈறு பேன் தொல்லை, பேன் மற்றும் பொடுகு தொல்லை, natural ways to prevent lice, தீர்வு
No comments:
Post a Comment