ருத்ராட்ச மாலை எப்படி இருக்க வேண்டும்? - ருத்ராட்சம் மாலை அணியும் முறை - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Monday 26 June 2017

ருத்ராட்ச மாலை எப்படி இருக்க வேண்டும்? - ருத்ராட்சம் மாலை அணியும் முறை


ருத்ராட்ச மாலை எப்படி இருக்க வேண்டும்?, ருத்ராட்சம் மாலை அணியும் முறை
ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்,  ருத்ராட்ச மாலை எப்படி இருக்க வேண்டும்?, ருத்ராட்சம் மாலை அணியும் முறை, ருத்ராட்சம் அணிவது பற்றி

சாமான்யமாக இம்மணிகளை மாலையாக கோர்ப்பது வழக்கம். நமது மரபில் 108 + 1 என்ற கணக்கில் மணிகள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தனியாக உள்ள ஒரு மணியை “பிந்து” என்கின்றனர். ஒவ்வொரு மாலையிலும் ஒரு பிந்து இருப்பது அவசியம். இல்லையேல் அதன் சக்தி ஒருவித சுழற்சியில் சிக்கிக்கொள்ளும். இதனால் அதை அணிபவர் சிறிது பலவீனமாக இருப்பவரானால் தலை சுற்றல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள். ருத்ராட்ச மணிகளை கோர்க்கும் பொழுது பட்டுநூலோ அல்லது பஞ்சுநூல் கொண்டோ கோர்ப்பது சிறந்தது. நூலில் கோர்த்த மாலை என்றால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை நூலை மாற்றுவது நல்லது, இல்லையென்றால் நூல் ஒரு நாள் அறுந்து உங்கள் 108 மணிகளும் ஒவ்வொரு பக்கம் உருள வாய்ப்பு உண்டு. செம்பு, வெள்ளி, தங்க கம்பியிலும் இம்மணிகளை கோர்க்கலாம், ஆனால் பெரும்பாலும் நீங்கள் அதை நகை கடைக்கு கொண்டு செல்வீர்கள். கடைக்காரர் தங்க கம்பியோ அல்லது வேறெதுவோ கொண்டு இறுகக் கட்டி முடிக்கும் போது ருத்ராட்சம் உள்ளே விரிசல் விடலாம். நான் எவ்வளவோ முறை நகைகாரரிடம் சொல்லச்சொல்லியும், அவர்கள் என்னிடம் செய்து கொண்டு வரும்போது பெரும்பாலும் 30 – 40 விழுக்காடு உடைந்து இருக்கும். தளர்ந்த முறையில் கோர்ப்பது சிறந்ததும், முக்கியமும் ஆகும். அழுத்தத்தால் உண்டான விரிசல் உள்ள மாலை நல்லதல்ல.

இந்த மாலையை எந்நேரமும் அணியலாம். குளிக்கும் பொழுது கூட நீங்கள் இதை அணியலாம். நீங்கள் பச்சை தண்ணீரில் குளிப்பவராகவும், இரசாயன சோப்பு பயன் படுத்தாதவராகவும் இருந்தால், தண்ணீர் இதன் மேல் பட்டு உங்கள் உடல் மீது வழிவது மிக்க சிறந்தது. ஆனால் நீங்கள் இரசாயன சோப்பும், சுடு தண்ணீரும் பயன்படுத்துபவரானால், அது விரிசல் விட்டு சுலபமாக உடைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி சமயங்களில் இதை அணியாமல் இருப்பது நல்லது.


 ருத்ராட்ச மாலை அணிபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

ருத்ராக்ஷம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அணியலாம் , இதற்க்கு எந்த கட்டுபாடுகளும் கிடையாது. இணையத்திலும் சரி பொதுவாழ்விலும் மக்களை குழப்பி விட என்றே ஒரு கூட்டம் இருக்கிறது ஐயா

ஒன்றிக்கு மேல் ருத்ராக்ஷ மணிகளை கோர்த்து மாலையாக அணிவதற்கு தான் பலவித கட்டுபாடுகள் உள்ளன , இவற்றை யாரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிய முடியாது , தகுந்த குரு அல்லது பெரியவர்கள் மூலம் தீட்சை அல்லது ஆசீர்வாதங்களுடன் அணியவேண்டும்.

ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.

நீராடல், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம் - உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும்.

இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும்.

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்,  ருத்ராட்ச மாலை எப்படி இருக்க வேண்டும்?, ருத்ராட்சம் மாலை அணியும் முறை, ருத்ராட்சம் அணிவது பற்றி

Loading...

No comments:

Post a Comment