இரத்த சோகை, ஆஸ்துமா, சுவாச பிரச்சனையை குறைக்கும் சீரக தண்ணீர்
அப்படி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் சீரகம். இந்த சீரகத்தைக் கொண்டு ஒரு பானம் தயாரித்து குடித்து வந்தால், நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைப் போக்கலாம்.
சீரக பானத்தை தினமும் ஒரு கப் குடித்து வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, உடல் சுத்தமாகவும், நோய்களின் தாக்குதலின்றியும் இருக்கும். தேன் கலந்த சீரகத் தண்ணீர் செரிமான அமிலத்தின் சுரப்பை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு, சீரக பானம் மிகவும் அற்புதமான ஓர் மருந்து. இதனைக் குடித்து வந்தால், மலம் இளகி குடலியக்கம் சீராக்கப்பட்டு, உடனே மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். சீரகத்தில் உள்ள கியூமினல்டிஹைடு என்னும் பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவை உடல் முழுவதும் பரவுவதை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
தேன் கலந்த சீரகத் தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவை சீராகப் பராமரிக்கும். இதனால் உடலில் இரத்த அழுத்தமானது சீரான அளவில் இருக்கும். சீரக பானத்தில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளதால், சுவாச அமைப்பில் உள்ள சளி சுரப்பிகளில் உள்ள உட்காயங்களை சரிசெய்து, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைக் குறைக்கும்.
தேன் கலந்த சீரகத் தண்ணீரில் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே இது உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
சீரக பானம்
சீரகம் - 2 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
முதலில் நீரை கொதிக்க வைக்கவும். பின் சீரகத்தைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால், மருத்துவ குணம் நிறைந்த சீரக பானம் தயார்.
No comments:
Post a Comment