ஸ்வீட் கார்ன் சப்பாத்தி - சமையல் செய்முறை - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Thursday, 20 April 2017

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி - சமையல் செய்முறை


ஸ்வீட் கார்ன் சப்பாத்தி

செய்ய தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
ஸ்வீட் கார்ன் சப்பாத்தி - சமையல் செய்முறை , samayal seimurai, siruvar unavugal,
செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி… பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

Loading...

No comments:

Post a Comment