பிரெட் வெஜ் புலாவ் - சமையல் செய்முறை - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Thursday, 20 April 2017

பிரெட் வெஜ் புலாவ் - சமையல் செய்முறை


பிரெட் வெஜ் புலாவ் - சமையல் செய்முறை


செய்ய தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 6, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6,  பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் – ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பிரெட் வெஜ் புலாவ் - சமையல் செய்முறை, bread veg pulav recipe in tamil, snacks recipe
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக ‘கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு ‘கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி… மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.
பிரெட் வெஜ் புலாவ் - சமையல் செய்முறை, bread veg pulav recipe in tamil, snacks recipe

Loading...

No comments:

Post a Comment