தலை முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்! [டாக்டர் விகடன் ] - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Saturday 17 June 2017

தலை முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்! [டாக்டர் விகடன் ]


தலை முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!


தலை முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!, தலைமுடி உதிர்வதைத் தடுக்க, தலைமுடியைப் பராமரிக்க, நரையைப் போக்க
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, 'தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்... இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்... பளபளப்பு, மென்மை, கருமை என அலை அலையாய்க் கூந்தலில் வலம் வரலாம்’ என்பனபோன்ற விளம்பரங்கள் பலரையும் ஈர்க்கின்றன. சுருள்சுருளாக முடி இருப்பவர்கள், நேர்த்தியான நீள் முடியையும், நீளமான முடி இருப்பவர்கள் அலைஅலையாய்ச் சுருள் முடியையும், அதிக முடி இருப்பவர்கள் குறைவாகவும், குறைந்த முடி இருப்பவர்கள் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று ஏங்குகின்றனர். அனைவரின் ஏக்கத்தையும் போக்குவது இன்று மிகவும் சுலபம். ஆங்காங்கே இருக்கும் அழகு நிலையங்களில் இதற்கான அழகுச் சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு, அழகுக்கலை நிபுணர், தோல் சிகிச்சை நிபுணரைச் சந்திப்பது நல்லது.

இதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.
முடிவு இல்லாப் பிரச்னையாக நீடிக்கும் முடிப் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும். குழந்தையாக இருக்கும்போதே முடி வளர்ச்சிக்கான ஊட்டத்தைத் தருவதற்கும், முடியைப் பராமரித்துப் பாதுகாக்கவும் ஆர்.எம். ஹெர்பல்ஸ் உரிமையாளரும், இயற்கை அழகுக்கலை நிபுணருமான ராஜம் முரளி, பேஜ்-3 அழகு நிலையத்தின் முடி பராமரிப்பு நிபுணர்கள், மதன், அரவிந்த், கெவின் கேர் நிறுவனத்தின் தலை முடி மற்றும் சரும முதன்மை ஆராய்ச்சியாளர் லட்சுமி தியாகராஜன் மற்றும் உணவியல் நிபுணர் சோஃபியா போன்ற வல்லுநர்கள் இங்கே வழிகாட்டுகிறார்கள்.
தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும்.  தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது.




Credits: டாக்டர் விகடன்


Loading...

No comments:

Post a Comment