டேட்டிங் செல்லும் பெண்களே உஷார்.. - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Monday 18 September 2017

டேட்டிங் செல்லும் பெண்களே உஷார்..


டேட்டிங் செல்லும் பெண்களே உஷார்..மயக்க மருந்து, கற்பழிப்பு, மலட்டுத் தன்மை
சமீபத்தில் மும்பையின் பேன்ட்ஸ்டாண்ட் என்ற இடத்தில் மயக்க நிலையில் இருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளுக்கு என்ன நேர்ந்தது என்று எந்த விவரமும் நினைவில் இல்லை என்பதால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மருத்துவ பரிசோதனை முடிவில் அவள் 5 ஆண்களால் தொடர்ந்து மாறி மாறி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், அவளது ரத்தத்தில் R என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு வித மயக்க மருந்து கலந்திருந்ததும் தெரிய வந்தது.

அது என்ன மயக்க மருந்து...

ரோ_ _ல் என்ற மருந்தின் அடிப்படை குணம், மயக்க நிலையை ஏற்படுத்துவதும், கரு உருவாவதை தடை செய்வதும்தான்.

இந்த மருந்துகள் பெருமளவு கால்நடை மருத்துவமனைகளில்தான் பயன்படுத்தப்படுகின்றன. அங்கிருந்து எடுத்து வந்து, கற்பழிப்புக்கு பயன்படுத்தும் அளவிற்கு இங்கு மனிதம் செத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மருந்து மனித உடலுக்கு உள்ளே சென்றால் சுய நினைவை இழப்பதுடன், மருந்து உட்கொண்ட பிறகு 10 முதல் 12 மணி நேரத்திற்கு என்ன நடந்தது என்றே நினைவில் இருப்பதில்லை.

இதன் மூலம் கற்பழிப்புக்கு உள்ளான பெண், தன்னைக் கற்பழித்தவரைக் காட்டிக் கொடுக்க முடியாது. மேலும், அந்த பெண் கருவுற்று, டிஎன்ஏ சோதனை செய்து அதன் மூலம் குற்றவாளியைப் பிடிக்கும் சாத்தியமும் இல்லாமல் செய்கிறது இந்த ரோ_ _ல் மருந்து.

இந்த மருந்தை அதிகமாக உட்கொண்டால் நிரந்தர மலட்டுத் தன்மையையே ஏற்படுத்தி விடும் அபாயமும் உள்ளது. 

இந்த மருந்து அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது இதற்கு தனி நிறமோ, சுவையோ, மணமோ கிடையாது. எனவே, இந்த மாத்திரையை உண்ணும் உணவில் சேர்த்துவிட்டால் சாப்பிடுபவர்களால் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாது.

இந்த மருந்தைப் பயன்படுத்தி கற்பழிப்புச் செயல்களில் இடுபடுபவர்களைத் தண்டிக்க சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது அமெரிக்க அரசு என்று கூறுவதில் இருந்து, இந்த மருந்தின் விளைவுகள் நன்கு தெரிய வருகிறது.

Loading...

No comments:

Post a Comment