தேர்வு பற்றி அச்ச உணர்வு சிலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால், அதற்கு அவசியமே இல்லை.
தேர்வு பற்றிய புரிதலும், அதற்கேற்ப செயல்பாடும் இருந்தால் எந்த நிலையில் இருந்தாலும், மாணவ மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும்.
சித்திரம் (படம்) வரைய, சுவர் எப்படி அவசியமோ, அதுபோல, படிப்பதற்கு கண்கள் அவசியம். கண்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தொடர்ந்து படிக்கவும், எழுதவும் முடியும். அதனால், கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கண்களில் ஏற்படும் வலி, கட்டி மற்றும் எரிச்சல் போன்றவைகளால் கண்கள் பாதிப்படைகின்றன. மேலும், தேர்வு நேரங்களில் தூக்கம் குறைவாகவும், விழிப்பு அதிகமாகவும் இருப்பதால், கண்கள் சோர்வடையும். இதைத் தவிர்க்க, படிக்கும் போது, இடையிடையே, ஒரு கைக்குட்டையை, தண்ணீரில் நனைத்து, அவ்வப்போது கண்களின் மேல் ஒற்றி எடுப்பது நல்லது.
ஒரு நாளைக்கு, குறைந்தது, இரண்டு முறையாவது, கண்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த, குளிர்ச்சி தரக்கூடிய காய்களை, மெல்லிய துண்டுகளாக நறுக்கி, கண்களின் மீது வைக்கலாம்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது கண்கள் தளர்வடையும் போதோ, கண்களை மூடி, ஐந்து நிமிடங்கள் ஒய்வு கொடுப்பது நல்லது.
படிக்கும் போது, இடையில் சிறிது நிறுத்தி, பசுமையான இயற்கை காட்சிகளை ரசிப்பதன் மூலம், கண்களும், மனமும் புத்துணர்ச்சி அடையும்.
இரவில் தூங்கச் செல்லும் முன், தூய்மையான பன்னீரை இரண்டொரு சொட்டுகள், கண்களில் விட்டால், கண்கள் சோர்வு அடையாது.
இவற்றைத் தவிர, வாரத்தில் ஒரு நாள், எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதுடன், விட்டமின் ஏ சத்து நிறைந்த கறிவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.
அதேபோன்று, படிக்கும் போது, நல்ல காற்றோட்டமுள்ள தனி அறையில், முதுகு, 90 டிகிரியில் செங்குத்தாக இருப்பது போன்று, நிமிர்ந்து உட்கார்ந்து, படிக்கப் பழக வேண்டும்.
தனி அறை இல்லாவிட்டால், காற்றோட்டமுள்ள, படிப்பதற்கு ஏற்ற இடத்தை தேர்ந்தெடுக்கலாம். அது, வீட்டு மொட்டை மாடியாகவோ, கோவில் பூங்கா, மரங்கள் நிறைந்த வீட்டின் பின்புறமாகவோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை; சூழல் தான் முக்கியம்.
படிக்கும் அறையில் உள்ள விளக்கு, உங்களுக்கு முன்புறமாகவோ அல்லது பக்கவாட்டு சுவரிலோ அமைந்திருக்காதவாறு அமர்ந்து படியுங்கள். அதேநேரம், மிக அதிகமான மற்றும் மிக குறைவான வெளிச்சத்தில் படிக்காமல், சரியான அளவில் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
குண்டு பல்ப் என்று அழைக்கப்படும், மஞ்சள் நிற ஒளி தரும் விளக்கிற்கு பதில், டியூப் லைட் அல்லது வெள்ளை நிற ஒளி தரும் விளக்கு வெளிச்சத்தில் படித்தால், கண்களை உறுத்தாது.
படிக்க வேண்டிய பாடத்திற்கான பாடங்கள், குறிப்பேடுகள், குறிப்பு எழுத காகிதங்கள், எழுதிப் பார்க்க பேனா மற்றும் அடிக்கோடிட பென்சில் என, தேவையான அனைத்தையும் ஒரே சமயத்தில் எடுத்து வைத்த பின், படிக்க அமர வேண்டும். ஒவ்வொன்றையும், தேவைப்படும் போது, தனித்தனியாக எடுப்பதற்காக எழும் போது, ஆர்வம் குறைவதோடு, படிப்பின் மீது இருக்கிற கவனமும் தடைபடும்.
அவ்வப்போது, குடிப்பதற்கு தண்ணீர், இடையிடையே உண்ணுவதற்கு பிஸ்கட், எண்ணெய் அதிகமில்லாத சிறு தின்பண்டங்கள் மற்றும் கொசுவை விரட்டும் சாதனங்களை அருகில் வைத்துக் கொள்ளலாம்.
எவருடைய உதவியுமின்றி, நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய, மேற்கூறிய முன்னேற்பாடுகள் தவிர, பிறர், ஒத்துழைப்போடும் சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
தொலைக்காட்சி, ரேடியோ, தேவையற்ற உறவினர்களின் அழைப்புகள், தொலைபேசி அழைப்பு மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்களின் மூலம் ஏற்படும் இடையூறுகள் போன்ற, படிப்பை பாதிக்க கூடிய காரணிகளை, சரி செய்ய வேண்டும்.
பாடங்களின் பொருளுணர்ந்து, சரியாக புரிந்து, மனதை ஒருமுகப் படுத்திப் படித்தால் மட்டுமே நினைவில் தங்க வைக்க முடியும்.
'கான்சென்ட்ரேஷன்' உருவாக, நாம் செய்யும் பணியின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வம் இருக்கும் ஒன்றின் மீது, தானாகவே, 'கான்சென்ட்ரேஷன்' உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால், ஆர்வத்தோடு படியுங்கள். வீட்டில் சொல்கின்றனர், அப்பா மற்றும் ஆசிரியர் திட்டுவர் போன்ற காரணங்களுக்காக இல்லாமல், உங்களுக்காக படியுங்கள். 'என் வாழவில், உயர்வான இடத்தை நோக்கி முன்னேறுவதற்காக படிக்கிறேன்...' என, நினையுங்கள்.
பொதுவாக, படிப்பதற்கு ஏற்றது காலை நேரம். ஏனென்றால், அந்நேரத்தில், பிறருடைய தொந்தரவுகள் குறைவாக இருப்பதோடு, வயிறும் காலியாக இருக்கும். அதனால், ஜீரணத்திற்காக, இரைப்பைக்கு தேவைப்படாத ரத்தம், மூளைக்கு செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
காலை நேரத்தை போலவே, பிறருடைய தொந்தரவுகள் குறைவாக இருக்கக்கூடிய, பின்னிரவு நேரத்தையும், படிப்பதற்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்த பின், அப்பாடம் சார்ந்த முக்கிய குறிப்புகளை, தனி நோட்டில், நினைவு குறிப்புகளாக, தொடர் சங்கிலியை போல், வரிசைப்படுத்தி எழுதுங்கள். ஆனால், அவற்றை வாக்கியங்களாக இல்லாமல், சிறு சிறு வார்த்தைகளாகவும், அதேநேரம், அக்குறிப்புகளை பார்க்கும் போது, அதன் மூலம், நீங்கள் படித்த பாடம் சார்ந்த அனைத்து தகவல்களும் நினைவுக்கு வரும்படியும் அமைந்திருப்பது அவசியம்.
தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி சார்ந்த பாடங்களுக்கு முக்கிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிவியல் பாடங்களுக்கு, பாகங்களுடன், படங்களை தெளிவாக வரைந்து, சமன்பாடுகள், சூத்திரங்கள், குறியீடுகள் மற்றும் அளவீடுகள் ஆகியவைகளையும், வரலாறு சார்ந்த பாடங்களுக்கு நிகழ்வுகள் நடைபெற்ற ஆண்டுகள், என்ன நிகழ்வு, யார், யாருக்கிடையே, எதற்காக, எந்த இடத்தில் நடைபெற்றது, அதன் முடிவு மற்றும் விளைவுகள் ஆகியவைகளையும், நினைவு குறிப்புகளாக பயன்படுத்தலாம்.
இதுதவிர, 'குரூப் ஸ்டடி' செய்வது மற்றும் படித்த பாடங்களை நண்பர்களோடு விவாதிப்பதன் மூலம் நினைவுபடுத்தி பார்க்கலாம்.
ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து, அதில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொருவரும் விடை சொல்லி பழகலாம். படித்த முறைகளை, கூடுதலாக ஒரு கேள்விக்கென தயாரித்த பதில்களை பரிமாறிக் கொள்ளலாம். இப்படி செய்வதால், ஒருவர், ஒரு கேள்விக்கான பதிலை சொல்லும் போது, மற்றவர்கள், அதை கேட்க நேர்வதன் மூலம், மூளை, விழிப்பு நிலையை அடைந்து, தன்னுள் பதிந்து வைத்துள்ள பதில்களை, வெளிக் கொணர்ந்து, சரி பார்க்க ஆரம்பிக்கும். இம்முயற்சி, ஆண்டு முழுக்க தொடரும் போது, எக்கேள்வியை கேட்டாலும், அக்கேள்விக்கான பதிலை, மூளை சட்டென எடுத்து தர தயாராகி விடும்.

Loading...
No comments:
Post a Comment