மார்பகங்களை எப்படி பாதுகாப்பாக பராமரிப்பது, சுத்தம் செய்வது?
பெண்கள் எப்போதும் தங்களது உடல் நலத்தை காப்பதில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் முக்கியமாக கர்ப்ப காலத்திலும், குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் தங்களது உடல் மற்றும் மனநலத்தின் மீதும் முழுமையான அக்கறை கொண்டிருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். இதற்காக தனி கவனிப்புகள் தேவைப்படுகிறது. இது பற்றி இந்த பகுதியில் முழுமையாக காணலாம்.
மார்பக மசாஜ்
மார்பகங்களை ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதனால், மார்பகத்தில் உள்ள வறட்சியான தன்மை மறைந்து ஈரப்பதம் உண்டாகும். பல மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் பெண்களை மார்பகத்தின் காம்பு பகுதிகளில் மசாஜ் செய்ய வழியுறுத்துகின்றனர். இதனை கர்ப்பத்தின் இரண்டாவது பருவ காலத்தில் செய்ய வேண்டியது அவசியமாகும். இதனால் மார்பக காம்பு பகுதிகளில் உள்ள வறண்ட தன்மை மறையும்.கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாகவும், வீக்கத்துடனும் காணப்படும். கர்ப்ப காலத்தில் தாயின் மார்பகங்கள் பாலூட்ட தயார் ஆவதே இதற்கான காரணம் ஆகும். பல பெண்கள் மார்பக காம்புகளில் வறட்சியாக இருக்கும். மேலும் மார்பக காம்புகள் இந்த நேரத்தில் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும்.உள்ளாடைகள்
உள்ளாடைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பேன்சி டைப்களிலான உள்ளாடைகள், வலியை உண்டாக்க கூடிய உள்ளாடைகளை அணியாமல் இருக்க வேண்டியது அவசியம். இவை உங்களது மார்பகங்களில் அரிப்பு மற்றும் தடிப்புகளை உண்டாக்கலாம்.ஆலிவ் ஆயில்
சிறிதளவு மசாஜ் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது மாய்சுரைசரை விரல்களில் தடவிக் கொண்டு மார்பக காம்புகளை வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியமாகும். இதனை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் கொண்டு செய்ய வேண்டியது அவசியமாகும். தினமும் இரண்டு தடவைகள், 5 நிமிடங்கள் இதை செய்தால் போதுமானது.பாலூட்டும் போது
குழந்தைக்கு பாலூட்டும் முன்னர் உங்களது மார்பக காம்புகளை ஒரு மெல்லிய துணியால் தண்ணீரை தொட்டு துடைக்க வேண்டியது அவசியம். கிருமிகள் இருக்கும் என்று உணர்ந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் துடைத்தால் போதுமானது.பாலூட்டும் போது கவனிக்கவும்
உங்களது மார்பக காம்புகளில் ஏதேனும் கெமிக்கல் அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், க்ரீம்கள் போன்றவை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கும். அவ்வாறு இருந்தால் சுத்தமாக துடைத்து விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.பாலூட்டிய பிறகு
குழந்தைக்கு பாலூட்டிய பிறகு மீண்டும் மார்பகத்தை முன்னர் போலவே துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். இது குழந்தையின் எச்சிலை அந்த பகுதியில் இருந்து நீக்க உதவியாக இருக்கும். இதனால் பாக்டீரியா தொற்று உண்டாகாமல் தவிர்க்கலாம். உங்களது தாய்ப்பாலில் ஆன்டி பயோடிக்ஸ் உள்ளது. இது குழந்தையை தொற்றுகள் தாக்காமல் பாதுகாக்க உதவுகிறது.ஆடைகள்
பால் கொடுக்கும் போது கர்ப்ப கால உடைகளையே பயன்படுத்தவும். காட்டன் உடைகள் மிகவும் சிறந்தது. பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்க்கவும். மிக நீண்ட நேரம் இ பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிவது என்பது ஏற்கனவே வலி உள்ள மார்பக காம்புகளில் வலியை உண்டாக்கும்.மார்பகங்கள் சுத்தம்
தினமும் சோப்பு தண்ணீரில் சுத்தமாக மார்பகங்களை கழுவி, ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, வைத்திருக்க வேண்டும். இதனால் மார்பகங்களில் வெடிப்புகள் உண்டாகாமல் இருக்கும்.மார்பக காம்புகளில் வெடிப்புகள்
மார்பக காம்புகளில் வெடிப்புகள் இருந்தால், சிறிதளவு தாய்ப்பாலை எடுத்து மார்பக காம்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவுங்கள். இதனால் மார்பக காம்பில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.
Loading...
No comments:
Post a Comment