படுக்கை அறையில் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க என்ன செய்யலாம்? - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Thursday, 8 March 2018

படுக்கை அறையில் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க என்ன செய்யலாம்?


படுக்கை அறையில் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க என்ன செய்யலாம்? - Padukkai araiyil neenda neram inbam anubavikka enna seiyyalam, Antharangam, Sex Tips in tamil, Udaluravu Tips,
நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் - உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்

உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை.

நிறுத்துங்கள் - தொடருங்கள் - நிறுத்துங்கள்


இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள். இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.

ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

பிசைந்து கொடுங்கள்


அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.

உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை


இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.

அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும். இதுபோல நிறைய இருக்கிறது... அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்...!

Loading...

No comments:

Post a Comment