தலைமுடி உதிர காரணங்கள் - தலை முடி எதனால் கொட்டுகிறது என்பதை தெரிந்துகொண்டால் அதை எளிதில் தடுக்கலாம்
கரு கரு தலைமுடி அனைவரது கனவாக உள்ளது. சிலருக்கு அந்த கனவு நிறைவேறாமலே போய்விடும். தலைமுடி உதிர்தல் ஆலோபிசியா என்று அழைக்கப்படுகிறது. உடல் அல்லது தலையில் இருந்து முடி உதிர்வது ஆலோபிசியா ஆகும். சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி நம் தலையில் இருந்து உதிரும். அதனை ஈடு செய்ய அதே அளவு முடி வளர்ந்து விடும். முடி கொட்டுதல் என்பது, உதிரும் தலைமுடியின் அளவு திரும்ப வளரும் தலைமுடியின் அளவை விட அதிகமாக இருப்பது ஆகும்.
Read Related: தலைமுடி உதிர்வதை தடுக்க வீட்டு மருத்துவங்கள்
தலைமுடி கொட்டுதலில் சில உண்மைகள்
அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் முடி கொட்டுதல் ஒரு முறையேனும் நடைபெற்று விடும். தலைமுடி உடைந்து உதிர்தல் மற்றும் தலைமுடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது ஆகிய இரண்டும் வெவேறு குறைபாடுகள். ஆன்றோகேநேடிக் குறைபாடு ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படுகிறது. பெரும்பாலும் இது ஆண்களை பாதிக்கிறது. கான்சர் போன்ற நோய்களினாலும் முடி உதிருகிறது.
உடல் ரீதியான பிரச்சினைகளினால் உதிரும் தலைமுடி
விபத்தினால் உடல் குறைபாடு, அறுவை சிகிச்சை, காய்ச்சல் போன்றவற்றால் தலைமுடி உதிர்ந்தால் அதற்கு telogen effluvium என்று பெயர். பொதுவாக முடி வளர்தலில் மூன்று நிலைகள் உள்ளன. முடி வளர்தல், முடி ஓய்வெடுத்தல், மற்றும் முடி கொட்டுதல். உடல் ரீதியான உபாதைகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுதல் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் நம் உடல் சரியாகும் போது முடி உதிர்தல் குறைய ஆரம்பிக்கும்.
கர்ப்ப காலத்தில் முடி உதிர்தல்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொது அவள் தலைமுடி அவ்வளவாக உதிர்வது கிடையாது. ஆனால் குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து அவளது முடி உதிர்வதை உணர முடியும். இது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. இரண்டே மாதங்களில் இழந்த முடியை திரும்பப் பெறலாம்.இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும்.
தலையில் ஊற்றும் தண்ணீர்
அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம்.
விட்டமின் குறைபாட்டினால் தலைமுடி உதிரும்
உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
தலைமுடி சுத்தமின்மை
தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
தலைமுடியில் பொடுகுத் தொல்லை
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். பொடுகை போக்குவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம்.
தூக்கமின்மையினால் தலைமுடி உதிரும்
தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அத்யாவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்கிறது,. நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
தலைமுடி உதிராமல் இருக்க சீவும் முறை
தலையை நாம் சீவும் முறை கூட முடி கொட்டுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். நீளமான முடியாய் இருந்தால் முதலில் தலையில் சிக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து சீவ வேண்டும். இம்முறை தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது.
Loading...
No comments:
Post a Comment