ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. ருத்ராட்சம் அணிவதால் மனநிம்மதி கிடைக்கும். உடல்நலம் சீராகும்.
சிறுவர், சிறுமியர் அணிவதால் அவர்களின் படிப்பு திறனானது பளிச்சிடும்.
பெண்கள் ருத்ராட்சம் அணிவதால் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். அவர்களின் கணவர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிட்டும்.
ருத்ராட்சம் அணிவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும், உடல்நலம் குன்றியோர், மனநலம் குன்றியோர், சர்க்கரை நோய், இதயநோய் உடையவர்கள் அணியும் போது உடல்நலன் படிபடியாக சீராகும்.
Source: http://news.lankasri.com/spiritual/03/121842
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம். ஒரு முகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் ஆற்றல் உடையது. எனவே இதனை தகுந்த வழிகாட்டுதல் இன்றி அணியக்கூடாது.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச
கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள்,
நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு
உள்ளவர்கள் இதை அணியலாம். இருமுகம் கொண்ட துவிமுகி ருத்ராட்சமானது பொருள்வளத்தினை தரும்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4 முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5 முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சமானது உடலுக்கு ஆரோக்கியத்தினையும் ஆற்றலினை தரவல்லது. இதனை ஆண், பெண் பேதமின்றி அனைவரும் அணியலாம்.
6 முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும். ஆறு முகம் கொண்ட ருத்ராட்சமானது சண்முகி ருத்ராட்சம் என அழைக்கப்படுகிறது. இதனை 14 வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் அணிவதன் மூலமாக தாயின் பூரண பாசத்தினை பெறலாம்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.
8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.
13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
ஒரு முகம் ருத்ராட்சம், ஐந்து முக ருத்ராட்சம், மூன்று முக ருத்ராட்சம், இரண்டு முக ருத்ராட்சம்
Loading...
No comments:
Post a Comment