ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.
ருத்திராட்சத்தை மனிதர்கள் அனைவரும் அணியலாம். ஆனால் இதனை அணிந்தவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தீட்டு இடங்களுக்கோ, இல்லத்திற்கோ செல்லக்கூடாது. தீட்டு ஆனவர் கைகளால் உணவு அருந்தக் கூடாது. அப்படி ஏதேனும் அறியாமல் நடந்து விட்டால் ருத்ராட்சத்தை தூய்மை செய்து பின்பு அணிந்தால் நன்மை தரும். மேலும், பெண்கள் ருத்திராட்சம் அணிந்திருந்தால் இரவில் கழற்றி பூஜை அறையில் வைத்து விட்டு காலை எழுந்து குளித்து விட்டு அணிய வேண்டும், மாதவிடாய் காலங்களில் இதனை கண்டிப்பாக தொடுதல் கூடாது.
குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்தால் ஜீரணம் சரியாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கல்வியை சிறந்த முறையில் பயில்வார்கள். ருத்திராட்சங்கள் ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை உண்டு. இதன் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம். ருத்ராட்சம் செயற்கை பொருளாகவும் கிடைக்கிறது. இதனை அணிந்தால் பலன் கிடைக்காது. இயற்கை பொருளாக இருந்தால் மட்டுமே ஆன்மீக பயன் மற்றும் மருத்துவ பயன், ஜோதிட பயன்களையும் தரும்.
மேலும், குறிப்பிட்ட முகம் கொண்ட ருத்ராட்சங்களை இடது கையால் தொடவும், எடுக்கவும் கூடாது. அதே போல ஜெப ருத்ராட்ச மாலைகளை பிறர் தொடவும் அனுமதிக்க கூடாது. பிறருக்கு தரவும் கூடாது. ஜெபம் செய்யும் ருத்ராட்ச மாலைகளை கழுத்தில் அணிய கூடாது. கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தக் கூடாது.
ருத்ராட்சம்: எப்படி அணியவேண்டும்? அணிந்தால் கிடைக்கும் நன்மைகள்? பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?, ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள், ருத்ராட்சம் அணிவது பற்றி, ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா, ருத்ராட்சம் பலன்கள், ருத்ராட்சம் அணிவது எப்படி
Loading...
No comments:
Post a Comment