தேவையற்ற கொழுப்பை நீக்கும் ஹெர்பல் டீ
தேவையானவை: காய்ந்த துளசி இலை, காய்ந்த புதினா இலை - தலா ஒரு கைப்பிடியளவு, பட்டை - சிறிய துண்டு, கறுப்பு ஏலக்காய் - 2, பச்சை ஏலக்காய் - 5, மிளகு - ஒரு டீஸ்பூன், அதிமதுரப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், திப்பிலி - 5, ஜாதிக்காய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த தேயிலை - ஒரு கைப்பிடி அளவு, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.
ஹெர்பல் டீ செய்முறை: மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றவும். இதனுடன் மிளகு, பட்டை, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள், காய்ந்த தேயிலை சேர்த்து அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, அரைத்தத்தூள் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தலாம்.
குறிப்பு: விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.
பயன்: தேவையற்ற கொழுப்பை நீக்கும்; அஜீரணக் கோளாறுகளை அகற்றும்.
Loading...
No comments:
Post a Comment