நீடித்து உங்கள் உறவில் சிறந்து விளங்க தினமும் 10 நிமிடம் இந்த பயிற்சி செய்யுங்க!
நட்பு, இல்லறம், பெற்றோர், குழந்தைகள், அக்கம் பக்கத்தினர் என நம்மை சுற்றி பல உறவுகள் இருக்கின்றன. அதிக பணத்தை விட, அதிக உறவுகளே நிலையான, ஆரோக்கியமான செல்வாக்கை உங்களுக்கு சமூகத்தில் ஏற்படுத்தி கொடுக்கும்.
உங்கள் உறவுகளுக்கு மத்தியில் நீடித்த சிறந்து விளங்க தினமும் பத்து நிமிடங்கள் இந்த பயிற்சி செய்யுங்க….
நாம் எதை ஒன்றை அதிகம் விரும்புகிறோமோ, எதன் அதிக சிந்தனையை செலுத்துகிறோமோ, அது தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்கள் வாழ்வில் தாக்கம் செலுத்தி வரும். இதை யாராலும் தடுக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
உங்கள் விருப்பம், சிந்தனை, நேர்மறையாக இருந்தால் உங்கள் வாழ்வில் உண்டாகும் தாக்கங்களும் நேர்மறையாக இருக்கும். எதிர்மறையாக இருந்தால், உங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களும் எதிர்மறையாக இருக்கும்.
இதை தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்’.அதாவது நல்லது செய்வதின் பலன் நல்லதே. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’. கெட்டது செய்வதின் பலன் கெட்டதே. என கூறப்பட்டிருக்கிறது.
உங்களை சுற்றி நீடித்த சிறந்த உறவு அமைய வேண்டும் ஆயின், நீங்கள் எல்லா உறவு முறையிலும் சிறந்த நபராக விளங்க வேண்டும். நல்ல நண்பனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல தோழியாக, நல்ல பெற்றோராக, நல்ல ஊழியனாக…. நீங்கள் இப்படி விளங்கினால், உங்களை சுற்றியும் நல்ல உறவுகள் பூக்கும். உங்களுக்கு யாரும் தீங்கு நினைக்க மாட்டார்கள்.
நீங்கள் உங்களை மீதான காதலை, உங்கள் உறவுகள் மீதான காதலை ஒரு காகிதத்தில் கடிதமாக, டைரியில் குறிப்பாக ஒரு பத்து நிமிடங்கள் ஒதுக்கி தினமும் எழுதுங்கள். தினமும் ஒருவரை பற்றியே எழுதலாம், அல்லது வெவ்வேறு உறவுகள் குறித்து எழுதலாம்.
நீங்கள் எழுதுபவை நல்ல நினைவுகளாக இருக்க வேண்டும். தீவற்றை ஒதுக்கிவிடுங்கள். மெல்ல, மெல்ல, அந்தந்த உறவின் மீதான காதல், நல்ல அபிப்பிராயம் அதிகமாகும்.
இந்த ஒரு பயிற்சியை நீங்கள் தினமும் மேற்கொண்டு வந்தாலே போதும். நீங்கள் பிற உறவுகளை அதிகம் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களது நேசம் அவர்களையும் உங்கள் மீது அன்பு செலுத்த வைக்கும்.
அன்பு எனும் அருமருந்து மனதில் ஏற்படும் காயங்களை முழுமையாக குணமடைய செய்யும். இது உறவுகள் ஆரோக்கியமாக அமைய சிறந்த கருவியாக திகழும்.
Loading...
No comments:
Post a Comment