கண்கள் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்க அழகு குறிப்பு
நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும்.
அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.
பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத்தரும்.
கண்கருவளையம் நீங்க சற்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.
ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.
வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும். திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.
உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.
உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கண்கள் அழகாக இருக்க அழகு குறிப்பு
Loading...
No comments:
Post a Comment