பைரவர் விரதம்: 30 நாட்களில் வேண்டுதல் நடக்கும் - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Sunday, 25 June 2017

பைரவர் விரதம்: 30 நாட்களில் வேண்டுதல் நடக்கும்


பைரவருக்கு விரதமிருந்து ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
பைரவர் விரதம்: 30 நாட்களில் வேண்டுதல் நடக்கும், bairavar viradham,

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. விரதமிருந்து ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். விரதமிருந்து வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் 9 பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபட லாம். 9-வது பவுர்ணமி அன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம் நைவேத்தியம் படைத்து வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

Loading...

No comments:

Post a Comment