கீழே கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து எண்ணெய் எடுக்க வந்த 150 பேரும் லாரி வெடித்ததால் அதே இடத்தில் உடல்கருகி இறந்த காட்சி - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Tuesday, 27 June 2017

கீழே கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து எண்ணெய் எடுக்க வந்த 150 பேரும் லாரி வெடித்ததால் அதே இடத்தில் உடல்கருகி இறந்த காட்சி


பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததில் 150 பேர் பலி

கீழே கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து எண்ணெய் எடுக்க வந்த 150 பேரும் லாரி வெடித்ததால் அதே இடத்தில் உடல்கருகி இறந்த காட்சி..

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில்,  நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தத்தில் 150 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

டேங்கர் லாரி வேகமாக நெடுஞ்சாலையில் ஒரு வளைவில் ஓடியபோது, டயர் ஒன்று தீ பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனைப் பார்ப்பதற்கும் கவிழ்ந்த லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்கவும் பெருங்கூட்டமாக அருகிலிருந்து வந்த மக்கள் கூடினர். கவிழ்ந்த 45 நிமிடங்களுக்குப் பின்  டேங்கர் லாரி வெடித்து தீப் பிழம்புகளால் சூழ்ந்து கூடியிருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீதும் பரவியது. 80 பேருக்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்ததாக நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர். இறந்தவர்களில் 20 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Loading...

No comments:

Post a Comment